2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2013 ஜனவரி 05 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை ஜம்இய்யத்துல் குர்ஆனில் ஹக்கீமின் ஏற்பாட்டில் அல்-குர்ஆனை திறமையாக பார்த்து ஓதிமுடித்த மாணவர்களுக்கு முதன்முறையாக சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

ஜம்இய்யத்துல் குர்ஆனில் ஹக்கீமின் தலைவர் மௌலவி ஏ.எல்.அப்துல் றசீட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் மௌலவி எம்.பி.அலியார் ஹஸரத், பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ.ஜப்பார், விசேட அதிதியாக காத்தான்குடி குர்ஆன் மத்ரஸா அபிவிருத்தி சபையின் சிரேஷ்ட பரிசோதகர் அல்ஹாபிழ் மௌலவி எச்.எம்.சாஜஹான் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 275 மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்களும் மற்றும் அல்-குர்ஆன் பிரதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இங்கு உலமாக்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X