2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

தெஹியத்தக்கண்டியில் கிழக்கு மாகாண அமைச்சின் நடமாடும் சேவை

Super User   / 2013 ஜனவரி 06 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் வீடமைப்பும் நிர்மாண அமைச்சின்; நடமாடும் சேவை இன்று ஞாயிறுக்கிழமை தெஹியத்தக்கண்டி சாலிக்கா மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த பிரதேச மக்களின் தேவைகளை கண்டறியும் முகமாக மாகாண அமைச்சினால் இந்த நடமாடும் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பையினால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் தத்தமது குறைகளையும் வேண்டுதல்களையும் முன்வைத்துள்ளனர்.

இவற்றில் அதிகமான பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு அமைச்சரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X