2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

அம்பாறையில் மீண்டும் வெள்ளம்

Kogilavani   / 2013 ஜனவரி 07 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களிலுள்ள குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

பெரியநீலாவனை தொடக்கம் பொத்துவில் வரையான மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.

மருதமுனை, பாண்டிருப்பு மேற்குப் பகுதிகளிலுள்ள சுனாமி வீட்டுத் திட்டங்களைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதேபோல், சாய்ந்தமருதுப் பிரதேச செயலகப் பிரிவுக்குப்பட்ட சுமார் 100 வீடுகளைச் சுற்றி வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் மழை தொடர்ந்து பெய்வதால் வீடுகளுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளதாகவும் சாய்ந்தமருதுப் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

இதேவேNளை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலும் பல குடியிருப்பு வளவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை தொடர்ந்தால், இங்கும் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகும் நிலை ஏற்படலாம்.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் வடிகான்கள் முறையாக நிர்மாணிக்கப்படாமையும், உரியமுறையில் பராமரிக்கப்படாமையுமே வெள்ளம்; வடிந்தோட முடியாமலுள்ளமைக்கான பிரதான காரணம் என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கரையோரப் பகுதிகளிலுள்ள நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன. 
                                                                                                                                                                                                                     

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X