2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

மத்தியஸ்தம் தொடர்பான செயலமர்வு

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

மத்தியஸ்தம் தொடர்பாக அம்பாறை மாவட்ட கிராம அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவூட்டும் செயலமர்வு நேற்று சாய்ந்தமருது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நீதி அமைச்சின் ஏற்பாட்டில், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர்  உதுமாலெப்பை தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில், கல்முனை தமிழ் பிரிவு, சாய்ந்தமருது ஆகிய பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள், கல்முனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்

இச்செயலமர்வில் வளவாளர்களாக நீதியமைச்சின் நிகழ்ச்சித் திட்டமிடல் உத்தியோகத்தர்களான வீ.சவரிநாயகம், பி.சனாதனசர்மா, லலித் ஹபுகஹபிடிய ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது முரண்பாடுகள், மத்தியஸ்தம், பிணக்குகளை தீர்த்து வைத்தல் என்பன தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X