2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

கல்முனை மேயரினால உணவுகங்கள் திடீர் சோதனை

Super User   / 2013 ஜனவரி 09 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேச உணவுகங்களை கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் திடீர் சோதனை மேற்கொண்டார்.

இதன்போது சமைப்பதற்கு  உதவாத உணவு பொருட்கள் மற்றும் காலவதியான தீன்பண்டங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

உணவகங்கள் தொடர்பாக கல்முனை மேயருக்கு பொதுமக்களினால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை தொடர்ந்தே மேயர் தலைமையிலான குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இப்பரிசோதனையின்போது ஆண்டு வியாபார அனுமதிப்பத்திரம், கழிவு நீர் வடிகானினுல் செலுத்தப்பட்டுதல், உணவுப் பண்டங்கள் திறந்த நிலையில் ஈக்கள் மொய்க்கும் வண்ணம் வைக்கப்பட்டிருத்தல், சமையல் அறையின் சுகாதாரம், குளிர்சாதன பெட்டியின் முழுமையான முகாமைத்துவம்,  சமைக்கும் பாத்திரங்களின் தூய்மை, மனித நுகர்விற்கு பொருத்தமில்லாத உணவுகள் விற்பனைக்காக களஞ்சியப்படுத்தி வைத்திருத்தல், சவர்க்காரமிட்டு கைகழுவும் வசதி வைத்திருத்தல் போன்ற விடயங்கள் தொடர்பாக கவனத்தில் கொள்ளப்பட்டது.
 
இதன்போது மேற்படி விடயங்கள் தொடர்பில் கவனக் குறைவாக செயற்பட்ட உணவு கையாளும் நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்திடீர் முற்றுகையின்போது மேயருடன் சுகாதார பிரிவு பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0

  • nasa Tuesday, 15 January 2013 08:10 AM

    நல்ல சேவை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X