2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

வறுமையற்ற இலங்கை தேசத்தை உருவாக்கல் தொடர்பில் செயலமர்வு

Super User   / 2013 ஜனவரி 15 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்,
ஏ.ஜே.எம்.ஹனீபா

'வறுமையற்ற இலங்கை தேசத்தை உருவாக்குதல்' எனும் திட்டத்திற்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விழிப்புணர்வு செயலர்வொன்று ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதியினால் முன்மொழியப்பட்ட 'வறுமையற்ற இலங்கை தேசத்தை உருவாக்குதல்' என்ற திட்டத்திற்கு அமைவாக இடம்பெற்ற இச்செயலமர்வினை ஆலயடிவேம்பு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.

பிரதேச செயலாளர் வீ. ஜெகதீஸன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆலையடிவேம்பு பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இதேவேளை, அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டவர்களுக்கான விNஷட செயலமர்வு நேற்று  அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் எம்.வை.சலீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் அம்பாறை மாவட்ட திட்டப்பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், உட்பட பலரும் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X