2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 28 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.மாறன்

சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியொன்றை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவர் அம்பாறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை, பொத்துவில் கரங்காவெல பிரதேசத்திலேயே இச்சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இச்சந்தேக நபரை கைதுசெய்த விசேட அதிரடிப்படையினர், பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் வீடொன்றில்;; சோதனையிடப்பட்டது. இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
 
இது தொடர்பான விசாரணையை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

மேலும் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  ரொட்டை, கோமாரி ஆகிய பிரதேசங்களில்; ஜனவரி மாதத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன 10 பேர் இதுவரையில் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X