2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி- சர்வமத் தலைவர்கள் சந்திப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 29 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்


அம்பாறை மாவட்டத்தில் உள்ள சர்வமதத் தலைவர்களுக்கும் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேராவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை மாலை அக்கரைப்பற்று 3 ஆவது இராணுவப் படைப்பிரிவின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதியின் ஆலோசணைக்கமைவாக அக்கரைப்பற்று 3 ஆவது இராணுவப் படைப்பிரிவின் தளபதியும் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஹரன் பெரேரா, மாவட்ட சிவில் இராணுவ இணைப்பதிகாரி சரத் தென்னக்கோன், மற்றும் 631 ஆவது படைத் தளபதி உட்பட பல இராணுவ அதிகாரிகள் மற்றும் சர்வமத தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் சமயங்களுக்கிடையிலான நல்லிணக்கம், புரிந்துணர்வு என்பன தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X