2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மியன்மார், பங்களாதேஷ் பிரஜைகளை மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்ப உத்தரவு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 04 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அம்பாறை, ஒலுவில் துறைமுக கடற்படை வளாகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பங்களாதேஷ் மற்றும் மியன்மார் பிரஜைகளை கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இவர்கள்  இலங்கை கடற்படையினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்பாற்றப்பட்டனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அலுவலர்களினூடாக கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமில் 08 நாட்களுக்குள் அனுப்பிவைக்குமாறு   அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதனையடுத்து, இவர்களை அழைத்துச் செல்வதற்காக ஒலுவில் துறைமுக கடற்படை வளாகத்துக்கு மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் வாகனங்களுடன் இன்று திங்கட்கிழமை சென்றுள்ளனர்.

கடற்படையினரால் காப்பாற்றப்பட்ட 138 பேரில்;  56  மியன்மார் பிரஜைகளும் அடங்குகின்றனர். ஏனையோர் பங்களாதேஷ் பிரஜைகளாவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X