2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

சமுர்த்தி உத்தியோகஸ்தர்களை திவிநெகும திணைக்களதுக்குள் உள்ளீர்க்க நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல் அஸீஸ்

சமுர்த்தி அதிகார சபை உத்தியோகஸ்தர்களை திவி நெகும (வாழ்வின் எழுச்சி) கிராம அபிவிருத்தி திணைக்களதுக்குள் உள்ளீர்ப்பதற்கான பணிகள் நாடுபூராகவும்  இடம்பெற்று வருகின்றன.

இதன் அடிப்படையில் அம்பாறை மாவட்ட அலுவலக சமுர்த்தி பிரிவினால் சமுர்த்தி அதிகார சபை உத்தியோகஸ்தர்களின் சுயவிபரக் கோவைகள் மற்றும் ஏனைய தேவைப்பாடுகளில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரேதச செயலகங்களில் நடமாடும் சேவையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நேற்று கல்முனை பிரேதச செயலகத்தில் இந்த நடமாடும் சேவை சமுர்த்தி  அம்பாறை மாவட்ட இணைப்பாளர் ஐ.அலியாரின் ஒருங்கிணைப்புடன் ஆரம்பித்து வைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X