2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கொள்வனவு செய்யப்படும் நெல் அம்பாறை களஞ்சியசாலைக்கு அனுப்பி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 14 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஹனீக் அஹமட்


அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள நெற் சந்தைப்படுத்தும் சபையினருக்குச் சொந்தமான களஞ்சியசாலையில் கடந்த போகங்களில் கொள்வனவு செய்யப்பட்ட நெல் அகற்றப்படாமை காரணமாக, தற்போது விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லினை - அம்பாறை களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த போகங்களில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து அட்டாளைச்சேனை நெற் களஞ்சியசாலையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த நெல்லின் சிறியதொரு தொகையே இம்முறை களஞ்சியசாலையிலிருந்து அகற்றப்பட்டது.

களஞ்சியசாலையின் முக்கால்வாசியளவான இடப்பரப்பில் கடந்த போகங்களில் கொள்ளவனவு செய்யப்பட்ட நெல்லே சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வரை அட்டாளைச்சேனை களஞ்சியசாலையினரால் 7 லட்சத்து 11 ஆயிரத்து 350 கிலோகிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாக அங்குள்ள உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், தொடர்ந்தும் நெல்லினை சேமிப்பதற்கு அட்டாளைச்சேனை களஞ்சியசாலையில் இடவசதி இல்லாமையினால், விவசாயிகள் கொண்டுவரும் நெல்லினை களஞ்சியசாலைக்கு வெளியில் வைத்து கொள்வனவு செய்து, அந்த இடத்திலேயே மற்றொரு வாகனத்துக்கு மாற்றி - அம்பாறை களஞ்சியசாலைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

அட்டாளைச்சேனை களஞ்சியசாலை பூட்டப்பட்ட நிலையில் உள்ளமையினாலேயே, களஞ்சியசாலைக்கு வெளியில் வைத்து நெல்லினைக் கொள்வனவு செய்யும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.

கடந்த போகங்களில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லினை  அட்டாளைச்சேனை களஞ்சியசாலையில் இருந்து முழுவதுமாக அகற்றியிருந்தால், இவ்வாறான அசௌகரியங்களைத் தவிர்த்திருக்க முடியும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

                                                                                                                                                                                                                                                            

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X