2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பொத்துவில் மீனவர்களுக்கு இளைப்பாறும் கட்டிடம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


பொத்துவில் பகுதியில் நன்னீர் மீனவர்களுக்கான புதிய கட்டிடம் ஒன்று திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

அத்துடன், அறுகம்பையில் சுற்றுலா தகவல் மத்திய நிலையத்திற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மேலும், நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வுகளின்போது நன்னீர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டன.

07 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட  மீனவர்கள் இளைப்பாறும் கட்டிடத்தை  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் திறந்து வைத்தார்.

55 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள சுற்றுலா தகவல் மத்திய நிலையத்திற்கான அடிக்கல்லை கிழக்கு மாகாண கால்நடை, விவசாய, சுற்றுலாத்துறை மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் நாட்டிவைத்தார்.

இந்த நிகழ்வுகளில்; நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம்,  கிழக்கு மாகாண அமைச்சர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .