2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்களுக்கான சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 26ஆம் திகதி காலை 8.30 தொடக்கம் மாலை வரைக்கும் சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெறவுள்ள இவ் வர்த்தக கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் உட்பட திணைக்களங்களின் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்வர்த்தக கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் பொத்துதவில் தொடக்கம் நாவிதன் வெளி பிரதேசம் வரைக்குமான பிரதேச செயலகங்களிலிருந்தும் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவதுன் விற்பணையும் இடம்பெறவுள்ளதாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம்.ஹூசைன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .