2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சி

Super User   / 2013 ஒக்டோபர் 26 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார்

சமுர்த்தி உற்பத்தி வர்த்தக கண்காட்சியும் விற்பனையும் இன்று சனிக்கிழமை ஆரம்பமானது. சம்மாந்துறை அல் - மர்ஜான் மகளிர் கல்லூரியில் இடம்பெறும் இந்த கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் தமிழ் பிரதேசங்கள் பங்குபற்றின.

சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த
வர்த்தக கண்காட்சி மாகாண சுகாதார  அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த வர்த்தக கண்காட்சியில் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கிழ் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வு, திரிய பியச வீட்டுக் காசோலைகள் வழங்கல், சிப்தொற புலமைப்பரிசில் வழங்கல், கடந்த வருட வர்த்தக கண்காட்சியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் என்பனவும் வழங்கப்பட்டன.

அம்பாறை மாவட்டத்தின் பொத்தவில் தொடக்கம் நாவிதன் வெளி பிரதேசம் வரைக்குமான 13 பிரதேச செயலகங்களில் இருந்து 26 சமுர்த்தி வங்கிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன்; விற்பனையும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .