2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மின் விளக்குகள் பொருத்தப்பட்டன

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஏ.எஸ்.எம்.முஜாஹித்


கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபின் பணிப்புரைக்கு அமைய சாய்ந்தமருது பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புறத்தில் வெளிச்சம் கூடிய மின்விளக்குகள் திங்கட்கிழமை மாலை பொருத்தப்பட்டது.

மேற்படி மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கைகள் முதல்வர் சிராஸின் மேற்பார்வையின் கீழ் நடைபெற்றன.

சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ள பொலிவேரியன் பிரதேசத்தின் பின்புற வயல்வெளி வழியாக இரவு நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதனாலும் அப்பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுவதனாலும் பிரதேச மக்கள் பீதியுடன் வசிப்பதாக மேயருக்கு கிடைத்த தகவலுக்கமைவாகவே மேற்படி மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.

கடந்த சில வாரங்களாக வொலிவோரியன் கிராம மக்கள் யானையின் பிரவேசம் காரணமாக  அவதியுறுவதாக கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்திற்கு நேரில் விஜயம் செய்த கல்முனை மாநகர முதல்வர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .