2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

கல்முனை மேயருக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஹக்கீம்

Super User   / 2013 நவம்பர் 01 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

சிராஸ் மீராசாஹீப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை மீறியுள்ளார். இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக அவர் செயற்பட முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இதனையும் மீறி அவர் கல்முனை மேயராக செயற்படுவாராயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மேயர் பதியிலிருந்து இராஜினாமா செய்யுமாறு சிராஸ் மீராசாஹிப்பிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைத்துவம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அத்துடன் இந்த இராஜினாமாவிற்கான காலக்கெடு நேற்று வியாழக்கிழமை காணப்பட்டது. எனினும் இதுவரை சிராஸ் மீராசாஹிப் கல்முனை மேயர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவில்லை.

இது தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் ஹக்கீம் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"இன்று நவம்பர் முதலாம் திகதியிலிருந்து கல்முனை மேயராக சிராஸ் மீராசாஹீப் செயற்பட முடியாது. இதற்கான அங்கீகாரத்தினை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வழங்கமாட்டாது. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் எவரும் சிராஸ் மீராசாஹிபிற்கு ஆதரவு வழங்கமாட்டார்கள்.

அத்துடன் கட்சியின் தார்மிக பொறுப்பை மீறிய அநாகரிகமான முறையில் அவர் செயற்பட்டுள்ளார். இதற்கு மேலதிகமாக கட்சிக்குள்ளும் கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய இரண்டு ஊர்களுக்கும் இடையில் பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இவர் கட்சியின் தலைமைக்கு வழங்கிய உறுதிமொழியை மீறும் வகையில் கடந்த ஒரு வார காலமாக தேவையற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதனை ஒருபோதும் கட்சி அனுமதிக்காது. எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக எந்தவொரு அரசியல் அந்தஸ்தும் சிராஸிற்கு வழங்கப்படமாட்டாது" என்றார்.

  Comments - 0

  • M.A.A.Rasheed Friday, 01 November 2013 10:22 AM

    ஸிராஷ் செய்வது அநாகரீகமான செயல். கட்சிக்கு விசுவாசமாக இருக்க வேண்டியது அவரது கடமை. முஸ்லிம் அரசியல்வாதிகள் இப்படித்தான் செய்கிறார்கள். ஸிராஷ் ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஊர் பைத்தியம் வேண்டாம். ஊரை பிரிப்பதும் அரசியல்வாதிகள்தான்.

    Reply : 0       0

    Ciitizan Friday, 01 November 2013 11:35 AM

    Vinai vithaithavan vinai arupan. Thinai vithaithan thinai arupan. Poruthirunthuthan parkavendum...

    Reply : 0       0

    S.M.M. Rizard Friday, 01 November 2013 02:16 PM

    பிரதேசவாதத்தை தூண்டி அப்பாவி சாய்ந்தருது, கல்முனை மக்களுக்கிடையில் தீராத பகையை ஏற்படுத்த நினைக்கும் பேராசை பிடித்த மேயருக்கு தகுந்த பதிலடி. மேயரின் பேராசைக்கு பள்ளிவாசல் சமூகமும் ஒத்துழைத்தது கவலையைத் தருகின்றது...

    Reply : 0       0

    S.M.M. Rizard Friday, 01 November 2013 02:22 PM

    தலைமைத்துவத்தின் கட்டுப்பாட்டை மீறி அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்ட பஸீர் மீது இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவில்லையே ஐயா, என்ன ஐயா நீதி உங்களிடத்தில்? அப்படி நீங்கள் ஒழுக்காற்று நடவடிக்கை பஸீர் மீது எடுத்தால் அவர் உங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பார் என்று பயமா?

    Reply : 0       0

    VALLARASU.COM Friday, 01 November 2013 03:13 PM

    என்ன மிரட்டுறீங்களா... முதல்ல பசீரின் பிரச்சினையை முடியுங்க, பின்னே முதலமைச்சர் பிரச்சினையை முடியுங்க, அடுத்து திவிநெகும பிரச்சினையை முடியுங்க, புத்தள மாநகர சபை உறுப்பினரின் பிரச்சினையை முடியுங்க... எவ்வள‌வு பிரச்சினை. இதைத்தான் சொல்லுவது ஒரு தலைவனுக்கு ஆளுமை வேண்டும் என்று... அது உங்களிடம் இல்லையே...

    Reply : 0       0

    faroouqi Saturday, 02 November 2013 06:34 AM

    முஸ்லிம் காங்கிரஸின் முடிவு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். ஆனால் அன்று பசீர் சேகு தாவூத் கடந்த மாகாண சபை தேர்தலில் மாற்று கட்சிக்கே வாக்குப்போட சொன்னாரே அவருக்கு என்ன முடிவு எடுத்தீர்? உங்கள் முடிவுகள் முஸ்லிம் காங்கிரஸின் யாப்புக்கு உடன்படவேண்டும். இதுவெல்லாம் ஒரு பூச்சாண்டி. உங்களுக்கு முஸ்லிம்களின் இரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கட்சிக்கு நீங்கள் ஒரு தலைவர் நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்வது! முதல் தலைமைப்பதவி கைமாறவேண்டும். கடந்த காலங்களில் கட்சி விட்டு சென்றவர்கள்தான் அதிகம். ஆனால் வந்தவர்கள் எல்லாம் எப்படி பதவி பெற்று பின் இப்போது நடக்கும் நிகழ்வுகள் உருப்பெறுகின்றன. ஆகவே ஐக்கிய தேசிய கட்சி இன்று அடைந்த பின் அடைவுக்கு யார் காரணம் அவர் தலைவர் தான். எனவே மிகவும் அன்புடன் வேண்டுவது தலைமைப்பதவி கை மாறவேண்டும். மற்றது நீங்கள் களமுனைக்கு சென்று தீர்வு காணுங்கள். உங்களை வந்து சந்திப்பதற்கு நாங்கள் நேரம் ஒதுக்கவேண்டுமா? உலமாசபை நீங்கள் யார் அழைத்தாலும் அவர் வரவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .