2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பெண் சாரணியர்களின் முழு நாள் ஒன்றுகூடல்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா


கல்முனை, அக்கரைப்பற்று கல்வி மாவட்ட பெண்  சாரணியர்களின் முழு நாள் ஒன்றுகூடலும் ஜனாதிபதி பதக்கம் சூட்டும் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை வை.எம்.சீ.ஏ ஆரதனை மண்டபத்தில் நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரும் கல்முனை, அக்கரைப்பற்று மாவட்ட சாரணியர் சங்கத்தின் தலைவருமான யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ மாவட்ட ஆணையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, உதவி மாவட்ட ஆணையாளர்களான எஸ்.எல்.முனாஸ், எம்.பிரசாந்தன், எம்.எப்.றிபாஸ், ஏ.பி.பத்தலோமியஜஸ், உட்பட கல்முனை,அக்கரைப்பற்று மாவட்ட பெண் சாரணியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த ஒன்று கூடல் நிகழ்வில் ஜனாதிபதி சாரணர் பதக்கம் பெற்றுக்கொண்ட கல்முனை ஸாஹிறா கல்லூரி மாணவன் எம்.எஸ்.எம்.சிறாஜ், மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.ஜே.அஹ்னாஸ் அஹமட் ஆகியோர் ஜனாதிபதி சாரணர் சின்னம் சூட்டப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் சாரணியர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .