2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஸாஹிரா கல்லூரியில் இடம்பெற்ற அநாவசியமான சம்பவங்களிற்கு ஹரீஸ் எம்.பி. கண்டனம்

Super User   / 2013 நவம்பர் 04 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான், ஏ.எஸ்.எம்.முஜாஹித்

கல்முனை ஸாஹிரா கல்லூரியில் அண்மையில் இடம்பெற்ற அநாவசியமான சம்பவங்களை வண்மையாக கண்டிப்பதாக கல்முனை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் இன்று திங்கட்கிழமை கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு தீடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். கல்லூரியில் இடம்பெற்ற அசாதாரன நிலைமை தொடர்பில் ஆராய்வதற்காகவே கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது பாடசாலையின் அதிபர்கள் பகுதித்தலைவர்கள மற்றும்  ஆசிரியர்கள் அடங்கிய பாடசாலை முகாமைத்துவக அங்கத்தவர்களுடன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது, பாடசாலையில் நேற்று இடம்பெற்ற பெற்றோர்கள், பழைய மாணவர்கள், பிரமுகர்கள் மற்றும் நலன் விரும்பிகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்டட ஏழு அம்சக் கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினரிடம் பதில் அதிபர் எம்.எஸ்.எம்.ஹம்ஸா ஒப்படைத்தார். இங்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்,

"இது போன்ற தேவையற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாதது தடுக்கப்பட் வேண்டும். பாடசாலையினுல் தேவையற்ற வகையில் அதிபரின் அனுமதியின்றி ஆசிரியர்கள் மீதோ அல்லது அதிபர்கள் மீதோ அல்லது நிருவாகத்தின் நடவடிக்கைகளிலோ தேவையில்லாமல் தலையீடக் கூடாது.

அதற்கு ஒருபோதும் இடமளிக்கவும் கூடாது. இங்கு நடைபெற்ற சம்பவத்தை நான் வன்மையாக கண்டிப்பதுடன் இப்பாடசாலை விடயங்களில் நான் மிகக் கவணமாக இருப்பேன். இந்த பாடசாலையின் பழைய மாணவன் என்ற வகையில் இப்பாடசாலை சீரழிய நான் இடமழிக்கமாட்டேன். இந்த பிரச்சினையோடு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு இந்த பிரச்சினை புதிதல்ல.

கடந்த சில மாதங்களுக்கு முன் கல்முனை மஹ்மூத் மகளிர் கலலூரியிலும் இவ்வாறான பிரச்சினை ஒன்று இவரால் ஏற்படுத்தப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் மாணவர்களேயாகும். ஆனால் இங்கு பாதிக்கப்பட்டவர்கள் அதிபர் ஆசிரியர்கள்.

ஏதொவொரு வகையில் இங்குள்ள ஆசிரியர்களால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டடுள்ளனா.
இதற்காக முயற்சி செய்த அனைத்து சாராருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றிகளைக் கூறிக்கொள்கின்றேன்.

எதிர்காலத்தில் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் என்னால் முடிந்த சகல விதமான உதவிகளையும் மேற்கொள்வேன்.இப்பிரச்சினை தொடர்பாக சுமுகமான நடவடிக்கை எடுப்பதற்காக  அனைத்து தரப்பினருடனும் நான் பேசியுள்ளேன்.  விரைவில் இதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றார்.



  Comments - 0

  • Faisar Monday, 04 November 2013 03:06 PM

    ஹரிசுக்கு தேவையில்லாத கதை...

    Reply : 0       0

    VALLARASU.COM Monday, 04 November 2013 03:21 PM

    ஒங்கட கண்டன அறிக்கையை அடுத்த தேர்தலின் போது தெரிவித்திருக்கலாமே...

    Reply : 0       0

    vimarsanamstr Monday, 04 November 2013 03:50 PM

    சுமார் ஒன்றரை வருடங்களாக சாஹிரா சீரழிந்த போது உங்கள் கண் திறக்கவில்லையே. அங்குள்ள கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் இருந்த போது பார்த்துச் சென்ற ஐயா நீங்கள் ஆறு மாதங்களுக்கு பின்னர் வந்துள்ளீர்களே. பிரதி கல்வி பணிப்பாளர் முக்தாரால் மஹ்மூத் மகளிர் கல்லூரில்யில் பிரச்சினை ஈட்பட்டதாக கூறியுள்ளீர்களே அதன் பின்னணி உங்களுக்கு தெரியுமா?

    Reply : 0       0

    ashraff Tuesday, 05 November 2013 11:46 AM

    நம்ம தல லேட்டா வந்தாலும் லேட்டஸ்டான நியுஸ் உடன்தான் வந்திருக்கிறாரு...

    Reply : 0       0

    ashraff Tuesday, 05 November 2013 11:47 AM

    நல்லதொரு முடிவுதான்..

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .