2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கடையில் கொள்ளையிட்டவர் கைது

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

பலசரக்குக் கடையொன்றை உடைத்து பணத்தையும் பொருட்களையும் கொள்ளையிட்டதாகக் கூறப்படும் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்

அம்பாறை மாவட்;டத்தின் ஒலுவில் உபதபால் கந்தோர் வீதியிலுள்ள கடையிலேயே இக்கொள்ளை இடம்பெற்றது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு இக்கடையை பூட்டிவிட்டுச் சென்ற  கடை உரிமையாளர், நேற்று செவ்வாய்க்கிழமை காலை கடைக்கு வந்தபோது கடையின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த 3,000 ரூபா பணமும் கையடக்கத் தொலைபேசிகளின் மீள்நிரப்பு அட்டைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளதைக் கண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து  பொலிஸ் நிலையத்தில் கடை உரிமையாளர்  முறைப்பாடு செய்தார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .