2025 ஜூலை 12, சனிக்கிழமை

அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளரின் இடமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 மே 02 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.றம்ஸான், பைஷல் இஸ்மாயில், எம்.எஸ்.எம்.ஹனீபா

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராக கடமையாற்றி வந்த ஐ.எல்.ஹைதர் அலியின் இடமாற்றத்தை கண்டித்து, ஒலுவில் பிரதேச மக்களால் ஜும்ஆ தொழுகையின் பின் நேற்று வெள்ளிக்கிழமை (01) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராக வந்ததன் பின்னர் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் இடமாற்றம் என்ற பெயரில் பழிவாங்கப்படுகின்றனர் எனவும் இதனை அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைவரும் வன்மையாக எதிர்ப்பதாகவும் இதன்பொது தெரிவிக்கப்பட்டது.

ஊரை கௌரவிக்கக்கூடிய பதவியான பிராந்திய முகாமையாளர் பதவியினை வகித்து வந்த பொறியியலாளர் ஹைதர் அலியை இடமாற்றியது, முஸ்லிம் காங்கிரஸ் இவ்வூருக்கு செய்யும் தூரோகமாகும் என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

இலங்கையில் நல்லாட்சி மலர்ந்துள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான அரசியல் பழிவாங்களுக்குள் உள்ளான ஊர் ஒலுவிலாகும். இப்பழிவாங்கல் முஸ்லிம் காங்கிரஸால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒலுவில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களிடம் கலந்தாலோசனை செய்யாமல் இடமாற்றம் செய்ததை வன்மையாக கண்டிப்பதாகவும். உடனடியாக இடமாற்றத்தை இரத்து செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .