Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மே 02 , மு.ப. 10:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.நசீர்; அண்மைக்காலமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் அரசியல் நாகரீகமற்ற வார்த்தைப் பிரயோகங்களையும் மேற்கொண்டு வருவதானது கண்டிக்கத்தக்கதொன்றாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை அல் அர்ஹம் வித்தியாலத்தில் வியாழக்கிழமை (30) இடம்பெற்ற நிகழ்வொன்றில், கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசியல் அதிகாரம் கிடைத்தவுடன் நான் என்ற மமதையுடன் சிலர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாகாண அமைச்சராக நான் பதவி வகித்த காலத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் எவரையும் பழி வாங்கியதில்லை. ஆனால் சிலர் பொய்யான பிரசாரம் செய்து அரசியல் இலாபம் தேட முற்படுகின்றனர்.
தியாக உணர்வுடன் நற்பண்புள்ளவர்களாக மக்களுக்கு பணி புரிந்த நமது மூத்த அரசியல் தலைவர்கள், மூத்த கல்விமான்கள், மார்க்க அறிஞர்கள் போன்றவர்களை இன்னும் நாம் நினைத்து பாராட்டிக் கொண்டிருக்கின்றோம்.
அந்தவகையில் பாடசாலைக்கல்வியே ஒருவரது வாழ்வில் முக்கிய செல்வாக்கினைச் செலுத்துகின்றது. ஒழுக்கமுள்ள சிறந்த தலைமைத்துவப் பண்புகளைக் கொண்டதும் ஆளுமை மிக்கவர்களாகவும் மாணவர்கள் திகழும்போது, அவர்கள் எதிர்காலத்தில் சிறந்த ஒழுக்கமுள்ள அரசியல் தலைவர்களாகவும் சமூகப் பெரியார்களாகவும் சமூகத்துக்கு பணி செய்பவர்களாகவும் இருப்பார்கள் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago