2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அலைபேசி விற்பனை நிலையம் கொள்ளை: 15 வயது சிறுவன் கைது

Thipaan   / 2015 மே 02 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கல்முனை பிரதான வீதியில் உள்ள அலைபேசி விற்பனை நிலையம் ஒன்றின் கூரையை நேற்று வெள்ளிக்கிழமை உடைத்து உள்நுழைந்து 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான அலைபேசிகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களை கொள்ளையிட்ட 15 வயது சிறுவன் ஒருவனை இன்று சனிக்கிழமை பகல் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

அலைபேசி விற்பனை நிலையத்தின் உரிமையாளர்  நேற்று இரவு வழமை போல பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று இன்று  சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்  கடையை திறந்துள்ளார்.

இதன்போது  கடையின் கூரை உடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அலைபேசிகள் மற்றும் அதன் உதிரிப்பாகங்கள் காணாமல் போயுள்ளதையடுத்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று பொலிஸார் உடைக்கப்பட்ட கடையை பார்வையிட்டு விசாரணையை மேற்கொண்டதுடன் இக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக கடையின் பின்பகுதி பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .