2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

இருவர் மீது தாக்குதல்

Suganthini Ratnam   / 2015 மே 06 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, அக்கரைப்பபற்று நகரிலுள்ள புகைப்படப் பிடிப்பு கடையொன்றில் கடமையாற்றுகின்ற பெண் ஒருவரையும் அதன் உரிமையாளரையும் 3 பேர் கொண்ட குழுவொன்று தாக்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இக்கடைக்குச் 3 பேர், கையடக்கத்தொலைபேசிக்கான முற்கொடுப்பனவு மீள்நிரப்பு அட்டையொன்றை கொள்வனவு செய்து அதன் இரகசிய எண்ணை சுரண்டினர். பின்னர், தாங்கள்  கேட்ட மீள்நிரப்பு அட்டையை தராது, பிறிதொரு  மீள்நிரப்பு அட்டையை தந்ததாகக் கூறினர். இந்நிலையில், அக்கடையில் கடமையாற்றும் பெண், சுரண்டப்பட்ட மீள்நிரப்பு அட்டையை மீள எடுக்கமுடியாதென்று தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடை உரிமையாளருக்கும் 3 பேருக்கும்  இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.  கடையில் கடமையாற்றும் பெண் மீது இவர்கள் தகாதவார்த்தைப் பிரயோகம் மேற்கொண்டதுடன், அப்பெண்ணையும்  உரிமையாளரையும்  தாக்கினர்.
பின்னர், புகைப்படக்கருவி, தொலைக்காட்சிப்பெட்டி, கையடக்கத்தொலைபேசி என்பவற்றை சேதமாக்கிவிட்டு அங்கிருந்து  தப்பியோடினர்.

தாக்குதல் மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் இவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X