Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 07 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,ஐ.ஏ.ஸிறாஜ்
நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற பூகம்ப அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதிசேகரிக்கும் வேலைத்திட்டத்தை அம்பாறை மாவட்ட செயலகம் முன்னெடுத்து வருவதாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்தார்.
பொது நிருவாக அமைச்சின் சுற்று நிரூபத்துக்கமைய பிரதேச செயலகங்கள் தோறும் இதற்கான நிவாரண உதவிகளை மக்களிடமிருந்து அறவீடு செய்யுமாறு பணிக்கப்பட்டதற்கமைய அட்டாளைச்சேனையில் நிவாரணம் திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்படி நிவாரணம் திரட்டும் விடயம் தொடர்பாக கிராம சேவை அதிகாரிகள், திவிநெகும அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், சமூக சேவை அதிகாரி எம்.ஐ.அன்வர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .