Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Princiya Dixci / 2015 மே 07 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, அக்கரைப்பற்று நகரின் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகாமையில் சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய தேசியக் கொடியொன்று இன்று (07) பறக்கவிடப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று நகரின் சனநெரிசல்மிக்க பொலிஸ் மற்றும் இரானுவத்தினரின் நடமாட்டம் நிறைந்ததுமான இப்பிரதேசத்தில் சிறுபான்மை மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையிலும், இனவாதத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்ட இவ்வாறான தேசியக் கொடி விவகாரம் இப்பிரதேசத்தைச் சேர்ந்த மக்களிடையே பெரும் கவலையையும், கிலேசத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுபான்மை இனங்களை பிரதிபலிக்கும் வகையிலான அடையாளங்கள் நீக்கப்பட்ட தேசியக் கொடி அண்மைக்காலமாக இவ்வாறு தோன்றி மறைந்துள்ள போதிலும் மீண்டும் இவ்வாறான செயற்பாடு தோன்றியுள்ளமை மக்களிடையே மிகுந்த அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.
அண்மைக்காலமாக கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் தோன்றிய சர்ச்சைக்குரிய இத்தேசியக்கொடி விவகாரம் இன்று அம்பாறை மாவட்டத்துக்கும் பரவியுள்ளமை இன முரண்பாட்டை தோற்றுவிப்பதற்கான செயற்பாடுகளாக இருக்கலாம் எனவும் இவ்வாறான செயற்பாடுகள் நாடடுக்கு இழுக்கையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்துமென இப்பிரதேச புத்திஜீவிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
8 hours ago
8 hours ago