Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Kogilavani / 2015 மே 08 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய பிரதி அமைப்பாளராக அக்கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால் நேற்று முன்தினம் (6) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக நேரடி அரசியலில் பிரவேசித்த கலாநிதி சிராஸ் மீராhஹிப் கடந்த மாநகர சபைத் தேர்தலின்போது அதிக வாக்குகளைப் பெற்று கல்முனை மாநகர சபையின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். பின்னர் இரண்டு வருடங்கள் முதல்வராக செயற்பட்டு கல்முனை மாநகர சபையின் முன்னேற்றத்துக்காக உழைத்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவின் கீழ் குறித்த பதவியை இராஜினாமா செய்த அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்து சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை பெறும் நோக்கில் அக்கட்சியில் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் சாய்ந்தமருது மக்களின் வேண்டு கோளின்பேரில் அமைச்சர் ரிசாட்; பதியுதீன் தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணைந்து அக்கட்சியின் தேசிய பிரதி அமைப்பாளராக நியமனம் பெற்றுள்ளதாக கலாநிதி சிராஸ் மீராசாஹிப் வியாழக்கிழமை(07) தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
10 minute ago
1 hours ago