2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

Princiya Dixci   / 2015 மே 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்

பொத்துவில் பிரதேசத்தில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி, பொத்துவில் பெரிய பள்ளிக்கு முன்பாக ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம், வெள்ளிக்கிழமை (08) இடம்பெற்றது.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் வாசகங்கள் அடங்கிய பாதைகளை ஏந்தியவாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஈடுபட்டனர்.
 
'அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மாகாண சபை முதல்வரே கல்வியை அரசியல் ஆக்காதீர்கள்', 'கல்வி அமைச்சரே ஏழை மாணவர்களுக்கு கருணை காட்டுங்கள்', 'இலவச கல்வியை எங்களுக்கும் தாருமையா', 'பொத்துவில் மாணவர்களின் எதிர்காலம் எங்கே செல்கின்றது?', 'தந்துவிடு  தந்துவிடு  எமது ஆசிரியர்களை தந்துவிடு', 'வேண்டாம் வேண்டாம் எமது ஊருக்கு துரோகம் வேண்டாம்' என கோசங்களை எழுப்பியும் தமது கவனயீர்ப்பு போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டனர்.

எமது போராட்டத்துக்கு தீர்வு கிடைக்காவிட்டால் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட நாம் தயார் எனக் கூறிய பொதுமக்கள், அரசியல்வாதிகளிடமும் கல்வி அதிகாரிகளிடமும் எமக்கு தீர்வு கிடைக்குமா? என இதன்போது கேள்வி எழுப்பினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X