Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மே 09 , மு.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட நாவிதன்வெளி கணேஷா வித்தியாலயத்தில் கல்வி கற்பிக்கும் மூன்று ஆசிரியர்களை இடம் மாற்றுமாறு கோரி, பெற்றோர்களும் மாணவர்களும் பாடசாலையின் நுழைவாயிலை மூடி நேற்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆசிரியர்கள் மூவரும் பாடசாலை நேரங்களில் மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகளில் அக்கறை செலுத்தாது கூடி பேசிக்கொண்டிருப்பதாகவும், பிள்ளைகளை தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், பாடசாலை நேரத்தில் அவர்களின் தனிப்பட்ட வேலைகளைச் செய்வதாகவும் கூறியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் யு. சௌதுல் நஜீம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன், நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் குணரெட்ணம் ஆகியோர் சென்று பெற்றோருடன் கலந்துரையாடினர்.
மூன்று ஆசிரியர்களையும் விசாரணை முடியும் வரை தற்காலிகமாக இடம் மாற்றுவதாக வலயக்கல்விப் பணிப்பாளர் உறுதியளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .