2025 ஜூலை 09, புதன்கிழமை

'சம்பள அதிகரிப்பு விண்ணப்பபடிவத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு'

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அரச உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த சம்பள அதிகரிப்பு விண்ணப்ப படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு இடம்பெறுவது இனிவரும் காலங்களிலாவது நிவர்த்தி செய்யப்படவேண்டும் என தழிழ் பேசும் உத்தியோகத்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

தற்போது அச்சிடப்பட்டு பாவனையில் உள்ள பொது 232 விண்ணப்படிவத்தில் சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள்; மாத்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

அரசகரும மொழியில் ஒன்றான தழிழ் மொழி இதன் மூலம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்படுகின்றது.

இதேவேளை, அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற சில சுற்று நிருபங்களும் சிங்கள மொழி மூலம் மாத்திரம் அனுப்பி வைக்கப்படுவதாகவும் இதனால் உத்தியோகத்தர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .