2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஏழு பேரிடம் மோசடி: சந்தேகநபருக்கு பிணை

Gavitha   / 2015 மே 11 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி, ஏழுபேரிடம் சுமார் 5இலட்சத்து 10 ஆயிரம் ரூபாவை மோசடி செய்த நபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் பிணையில் விடுவித்துள்ளார்.

வெளிநாடு அனுப்புவதாக கூறி ஏழு பேரிடம் பணத்தைப்பெற்று வெளிநாடு அனுப்பாமல் ஏமாற்றி மோசடி செய்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த நபரெருவரை அக்கரைப்பற்று பொலிஸார் சனிக்கிழமை (9)  மாலை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.

தான் வாங்கிய பணம் முழுவதையும் அவரவருக்கு ஜூன் மாதம் 11ஆம் திகதி வழங்குவேன் என சந்தேகநபர் உறுதியளித்துள்ளார். இதனையடுத்தே அந்த நபரை நீதிபதி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

அக்கரைப்பற்று நகர்பிரிவு- 5ஐ சேர்ந்த நபரெருவர் அக்கரைப்பற்று, அட்டாளைச் சேனை,  பள்ளிக்குடியிருப்பு, ஒலுவில் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரு பெண்கள் உட்பட ஏழு பேரிடம் இருந்து 5இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று வெளிநாட்டுக்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளார்.  

ஏமாற்றப்பட்டவர்கள் ஏழு பேரும் அக்கரைப்பற்று பொலிஸில் சனிக்கிழமை (9) முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .