Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 11 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காட்டு பிரதேச பிரதான வீதியில் திங்கட்கிழமை (11) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர், கால் உடைந்த நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பனங்காட்டு பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்றை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் அக்கரைப்பற்று பகுதியிலிருந்து பனங்காட்டு பிரதேசத்தை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பனங்காட்டு பிரதேசத்திலிருந்து வந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் ஒருவரின் கால் உடைந்த நிலையிலும் மற்றயவர் சிறு காயத்துடன் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பித்ததுடன் இரு மோட்டார் சைக்கிள்களையும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச்சென்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .