2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

13 வயது சிறுமியை கடத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2015 மே 13 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பதுர்நகர் பிரதேசத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்திய சந்தேகநபரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில்  வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல்,   இன்று (13) உத்தரவிட்டார்.

சந்தேக நபரை மன்றில் ஆஜர்படுத்தய போதே நீதிபதி மேற்படி உத்தரவை வழங்கினார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.

அக்கரைப்பற்று பதுர்நகர் மையவாடி வீதியைச் சேர்ந்த சிறுமியை அதே இடத்தை சேர்ந்த நபரெருவரே நேற்று (12) இரவு 10.30 மணியளவில் ஆசை வார்த்தைகளை கூறி அழைத்து சென்றுள்ளார்.

சிறுமியின் பெற்றோர் சிறுமியை காணவில்லை என தேடியபோது சிறுமி அட்டாளைச்சேனை கடற்கரையில் வைத்து மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார், இன்று (13) காலை சந்தேக நபரை கைது செய்து பிற்பகல் மன்றில் ஆஜர்படுத்தினர்.

சந்தேக நபர் 35 வயதுடையவர் எனவும் இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .