Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 மே 13 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டம் கஞ்சிகுடியாறு, தங்கவேலாயுதபுரம் மக்களின் அடிப்படைத் தேவைகள் குறைபாடுகள் தொடர்பாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் செயலாளருமான கி. துரைராஜசிங்கம் நேரில் சென்று மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார்.
கடந்த கால யுத்தத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு அடிப்படை வசதிகள்கூட நிறைவேற்றப்பாடாமல் காணப்படும் இக்கிராம மக்களின் வாழ்வாதார தொழிலாக விவசாயம் காணப்படுகிறது.
விவசாய தொழிலை மேற்கொள்வதில் இம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், பொதுக்கிணறுகள், விவசாயத்துக்கான நீர், வாய்க்கால் பிரச்சனை, போக்குவரத்து, மீள்குடியேற்றம், பாடசாலை, மின்சாரம், யானைகளின் தொல்லை, வீடு, தெருவிளக்கு என பல்வேறு வகையான குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்ட அமைச்சர,; அவற்றை தீர்பதற்கான நடவடிக்கைகளை மெற்கொள்ளவுள்ளதாகவும் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் மற்றும் இக்கிராம பொது மக்கள் விவசாயிகள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்கள் என பலர் கலந்து கொணடனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
07 Jul 2025
07 Jul 2025