Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2015 மே 14 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை மாவட்டத்திலுள்ள வேலையற்ற தமிழ்ப் பட்டதாரிகளின் கோரிக்கை நியாயமானது. மாகாண ரீதியில் வேலை வாய்ப்புக்களை வழங்கும்போது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டமை உண்மை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ரி.கலையரசன் தெரிவித்தார்.
திருக்கோவில் பிரதேச சபையின் புதிய கட்டடம்; மற்றும் சந்தைக் கட்டடத் திறப்பு விழா, வியாழக்கிழமை (14) நடைபெற்றது. இங்கு கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
'கல்வியல் கல்லூரி கல்வியை நிறைவு செய்கின்றவர்கள் உடனடியாக தொழில் வாய்ப்புக்களில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், கடந்த 4 வருடங்களுக்கும் மேலாக பட்டப்படிப்பை நிறைவு செய்துவிட்டு இன்றுவரை தொழில் வாய்ப்பின்றி புறக்கணிக்கப்பட்டு போராட்டங்களில் ஈடுபடும் தமிழ்ப் பட்டதாரிகளின் மன நிலை எவ்வாறிருக்கும் என்பதை நாம் அறிவோம். அதற்காக, நாங்கள் மௌனமாக இருக்கவில்லை. இவர்களின் தொழில் வாய்ப்புக்களுக்காக பல வழிகளிலும் நாங்கள் குரல் கொடுத்து வருகின்றோம்.
கடந்தகால ஆட்சியில் மக்கள் சார்ந்த எந்தவித திட்டங்களையும் நிறைவேற்றமுடியாத நிலையில் நாங்கள் அடக்கப்பட்டிருந்தோம். அந்த நிலையில், மாகாணசபை உள்ளும் வெளியேயும் பல போராட்டங்களை நாம் முன்னெடுத்திருந்தமையை இளைஞர், யுவதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.
தற்போது எமது மக்களின் ஒத்துழைப்போடு ஐனநாயக அரசியல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த ஐனநாயக அரசியல் மூலமாக எமது தேசிய தலைமையினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை விரைவில் பெற்றுக் கொடுப்போம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
07 Jul 2025
07 Jul 2025