2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'தேசியகீதத்தை தமிழ்ப் பிரதேசங்களில் தமிழில் பாடுவதே சிறந்தது'

Suganthini Ratnam   / 2015 மே 15 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,வி.சுகிர்தகுமார்

தேசியகீதத்தை தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ்மொழியில் பாடுவது  சிறந்தது என்பதுடன்,  ஆக்கபூர்வமானது என்றும் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்ன தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச சபையின் புதிய அலுவலகக் கட்டடத் திறப்பு விழா நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'எமது நாட்டு தேசியகீதம் அழகான, ஆழமான  கருத்துக்களை கொண்டுள்ளன.  இந்த தேசியகீதத்தை தமிழ்ப் பிரதேசங்களில்  சிங்களமொழியில்; பாடினால், அந்த தேசியகீதத்தின்  பொருள்  அவர்களுக்கு விளங்காது. அவர்கள் அதற்கு மதிப்பளிக்கவோ, செவிசாய்க்கவோ மாட்டார்கள்.

தேசியகீதம் தமிழ்மொழியில் பாடப்படும்போது, தமிழ் மக்கள் அதற்கான பொருளை  அறிந்து தேச பக்தியுடன் காணப்படுகின்றனர். தேசியகீதத்தை தமிழ் பேசும் மக்கள் தங்களின் மொழியில் பாடுவதே சிறந்தது.

இலங்கையின் தேசியகீதத்தை தமிழ்மொழியில் பாடுவது தொடர்பில்  அண்மைக்காலமாக நாடாளுமன்றத்தில்  விவாதங்கள் இடம்பெற்றன.  இந்த நிகழ்வில் தேசியகீதத்தை தமிழ்மொழியில் பாடியபோது, தமிழ் மக்கள் மற்றும் மாணவர்கள் உணர்வுபூர்வமாக  மதிப்பளித்ததை  காணக்கூடியதாக இருந்தது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .