2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் திறப்பு

Kogilavani   / 2015 மே 15 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேச பாடசாலைகளில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடங்கள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெள்ளிக்கிழமை(15) மக்களின் பாவனைக்காக கையளித்தார்.

இதற்கமைய அட்டாளைச்சேனை மத்திய கல்லூரி, பாலமுனை மின்ஹாஜ், ஒலுவில் அல்-ஹம்றா மற்றும் சாய்ந்தமருது, கல்முனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் படசாலைகளிலும் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் திறந்து வைக்கப்பட்டன.

இதேவேளை அட்டாளைச்சேனையில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச சபையின் நிர்வாகக் கட்டடம் மற்றும் சந்தைக்கட்டடத் தொகுதி என்பனவும் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்றன உறுப்பினர்கள், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .