Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2015 மே 16 , மு.ப. 04:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீலின் நிதி ஒதுக்கீட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள நூராணிய ஜூம்மா பள்ளிவாசலுக்கு 4 இலட்சம் ரூபாய் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட தண்ணீர் கொள்கலன் மற்றும் பிரதேச விவசாயிகளுக்கு 5 இலட்சம்; ரூபாய் நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட விவசாய உபகரணங்கள் என்பன கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) மத்தியமுகாம் 12ஆம் கொளனி 1ஆம் வட்டார நூராணிய ஜூம்மா பள்ளிவாசல் வளாகத்தில் இடம்பெற்றது.
மத்தியமுகாம் நூராணிய ஜூம்மா பள்ளிவாசல் தலைவர் ஏ.சீ.அன்வர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் ஏ.சீ.நஸார் ஹாஜி, கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் எம்.முனாஸ், நூராணிய ஜூம்மா பள்ளிவாசல் முன்னாள் தலைவர் மீராமுகைதீன், திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் நாவிதன்வெளி பிரதேச இணைப்பாளர் ஏ.எம்.மஹ்ரூப், தொழில் அதிபர் எம்.பீ.நபாஸ், நளீர் பவுண்டேசன் அமைப்பின் தலைவர் ஏ.நளீம், பள்ளிவால்களின் தலைவர்கள், கட்சியின் கிளைக் குழுத்தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் எற்படும் வரட்சி காலத்தில் பள்ளிவாசலின் தண்ணீர்த் தேவையை பூர்த்தி செய்யுமுகமாகவே தண்ணீர் கொள்கலன் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 minute ago
16 minute ago
50 minute ago