2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

வீடொன்றுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 மே 16 , மு.ப. 08:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

கடந்த பெப்ரவரி மாதம் வீடொன்றுக்கு தீ வைத்து விட்டு தலைமறைவாகி இருந்து வந்த சந்தேக நபரை, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல் வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டார்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

நாவற்காடு மாசத்தி வீதியிலுள்ள தனது தம்பியின் வீட்டுக்கு மதுபோதையில் உள்நுளைந்த சகோதரன், குறித்த வீட்டிற்கு தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். 

இதனையடுத்து அயலவர்களின் உதவியுடன் தீயைகட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தபோதும் வீட்டிலிருந்த பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்திருந்தன.

இதனையடுத்து, தலைமறைவாகியிருந்த நபரை பொலிஸார் தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) நாவற்காட்டுப் பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த நிலையில் பொலிஸார் அவரை கைது செய்தனர். 

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் பிடிவிறாந்து பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X