Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.ஏ.ஸிறாஜ்
ஒரு பாடசாலையின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் கூடுதலாக இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்தார்.
ஒலுவில் அல்ஹம்றா மகா வித்தியாலய தொழிநுட்ப ஆய்வு கூட திறப்பு விழாவின் பின்னர், அதிபர் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திக் குழவினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்
கல்வியின் மூலம் ஒரு சமூகம் மேன்மை அடைகின்றது இதற்காக கல்விச் சமூகம் அரப்பணிப்புடன் யெற்பட வேண்டும்.
ஒரு பாடசாலையில் நீண்ட கால குறைபாடாக இருந்த தொழிநுட்ப ஆய்வு கூடத்தின் தேவை இன்று நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இங்கு கல்வி கற்கின்ற உயர்தர விஞ்ஞான மற்றும் கணித பிரிவு மாணவர்கள். தகவல் தெழினுட்ப பாடத்தை ஒரு பாடமாக கற்கின்ற மாணவர்களுக்கும் எதிர்காலத்தில் மேற்குறிப்பிடப்பட்ட துறைகளை கற்க இருக்கின்ற மாணவர்கள் அதிக நன்மை அடையவுள்ளனர்.
இன்று நவீன கல்விக்கு எற்றாப்போல் மாணவர்களின் கல்வி நாளுக்கு நாள் மாற்றமடைந்து செல்கின்றது.மேலும் நவின உலகுக்கு எற்றவாறு மாணவர்கள் வழிகாட்டப்படல் வேண்டும்.
எனவே, இதற்கேற்றவாறு மாணவர்கள வழி நடாத்த வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் இந்த ஊரின் கல்விச் சமூகத்தின் மீது தங்கியுள்ளது.
ஒரு பாடசாலையை அதிபரினால் மாத்திரம் திறம்பட செயற்படுத்த முடியாது அதிபருடன் இணைந்து ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்ட கல்விச் சமூகம் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
அவ்வாறு செயற்படும் போது அந்த பாடசாலையின் உயர்வுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் அடித்தளமாக அமைகின்றது.
அதிபர் எம்.சரிப்தீன்தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம், வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசிம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago