Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 16 , மு.ப. 11:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி நகரசபையின் ஐம்பெரும் விழாக்கள் வெள்ளிக்கிழமை (15) மாலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் காத்தான்குடி நகர சபையினால் கடந்த 4 வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள், மக்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கள்;, ஆற்றிய பணிகள் தொடர்பாக கருத்துரைகள் வழங்கப்பட்டதோடு, நூலக கணினி வலைப் பின்னல் அங்குரார்ப்பணமும் இடம்பெற்றது.
இதன் போது பல்வேறு சேவைகளை காத்தான்குடி மண்ணுக்கு செய்த சமூக சேவையாளர்கள் மற்றும் கல்வித்துறை, மார்க்கப்பணிகள், ஊடகப்பணிகளில் கடமையாற்றியவர்களும்; இதன்போது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ். எச். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பிராந்திய உள்ளூராhட்சி உதவி ஆணையாளர் கே.சித்திரவேல் உட்பட நகர சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .