2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தொழிநுட்ப ஆய்வுகூட கட்டட திறப்பு விழா

Thipaan   / 2015 மே 17 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழிநுட்ப ஆய்வுகூட கட்டடத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) இடம்பெற்றது.

பாடசாலை அதிபர் எஸ். எம் ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் நகர அபிவருத்தி மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.

மேலும் இந்நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பைசல் காசீம், மகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம் நசீர், ஏ.எல்.தவம், ஆரிப் சம்சுதீன் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்ஸில், மு.காவின் ஸ்தாபக செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.ஏ.கபூர், பாலமுனை மசூறா சபையின் ஆலோசகர் எம்.ஏ.சதாத் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .