Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Sudharshini / 2015 மே 18 , மு.ப. 06:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவில் வறிய நிலையிலுள்ள 430 மாணவர்களுக்கு இஸ்லாமிக் றிலீப் நிறுவனத்தினால் கற்றல் உபகரணங்கள் வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) வழங்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் பொருட்டு இப்பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இஸ்லாமிக் றிலீப் நிறுவனத்தின் வதிவிட பிரதிநிதி எம்.இப்றாஹீம் ஸப்றி தலைமையில்; நடைபெற்ற இந்நிகழ்வில், இஸ்லாமிக் றிலீப் நிறுவனத்தின் வதிவிட பணிப்பாளர் ஸைனுல் சஹாபுதீன் பின் ஸைனுல் ஆப்தீன், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் ஐ.எல்.எம்.இர்பான், அதிபர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .