Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 மே 18 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
அம்பாறை, பொத்துவில் பிரதேச ஹிஜ்ரா கிராமத்துக்கான 55 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டுக்குரிய வேலைத்திட்டங்களை தெரிவுசெய்யும் முகமாகவும் அப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் வாழ்வியல் பிரச்சினைகள் தொடர்பாகவும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடப்பட்டன.
கிழக்கு மாகாணசபையால் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை, கிராமிய மின்சாரம் மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
பொத்துவில் ஹிஜ்ரா வித்தியாலயத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசித், கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் மஜீத், ஹிஜ்ரா, வித்தியாலய அதிபர் பஷீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .