Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Thipaan / 2015 மே 18 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா, ஐ.ஏ.ஸிறாஜ்
தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில மொழிப் பயிற்சி ஆகிய நான்கு மாத கால பயிற்சி நெறியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் சாய்ந்தமருது றியாளுல் ஜன்னா வித்தியாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்றது.
கடந்த 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் எழுதிய மாணவர்களுக்கு சாய்ந்தமருது நனசல, எஸ்.ஐ.ரீ. கெல்மஸ் இணைங்து வழங்கிய புலமைப்பரிசில் ஊடாகவே இவர்கள் இப் பயிற்சி நெறியை முடித்திருந்தனர்.
எஸ்.ஐ.ரீ. கெம்பஸின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.ஏ. அஸீஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், கல்முனை பொலிஸ் நிலைய பொது மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹீட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பயிற்சி நெறியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம். இல்லியாஸ், சய்ந்தமருது நனசலவின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எச். இம்தியாஸ் மற்றும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
பயிற்சி நெறியை பூர்த்தி செய்த சுமார் 100 மாணவர்களுக்க சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago