2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை தற்போதைய அரசாங்கம் வழங்குவதற்கான அறிகுறியுள்ளது

Sudharshini   / 2015 மே 19 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை தற்போதைய அரசாங்கம் வழங்குவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

வைத்திய அத்தியட்சகர் கே.எல்.நக்பர் தலைமையில்; அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(19) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இன்று மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் சில அரச நிறுவனங்கள் அபிவிருத்தி அடைவதில்லை என்ற மனப்பாங்கு பலரிடம்; இருந்து வருகின்றது. இதனால் மத்திய அரசின் கீழ் செல்வதற்கான முயற்சிகளையும் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது.

உண்மையில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்படுமாயின் இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு காரணமாக அமையாது.

எனவே, எமது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர், மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் 13ஆவது திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்துவதற்ககான அழுத்தங்களை மத்திய அரசுக்கு கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

நல்லாட்சியை நோக்கிய இந்த அரசாங்கத்தின் பயணத்தில், சிறுபான்மை மக்களுக்கான தீர்வும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களும் வழங்குவதற்கான சூழ்நிலை தோன்றியுள்ளதாகவும் முதலமைச்சர் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X