Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 மே 20 , மு.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ.ஹுஸைன்
கம்போடியாவில் நடைபெறுகின்ற உயிர்வாயு தொழில்நுட்பம் பற்றிய களப்பயிற்சியில் கிழக்கு மாகாண அரசதுறை உயரதிகாரிகள் மூவர் பங்குபற்றியுள்ளனர்.
ஜனதாக்ஸன் நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலர் அனுலா அன்ரன் தலைமையில் கிழக்கு மாகாணசபை பிரதம செயலாளர் சரத் அமுனுகமகே, கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சலீம் முஹம்மத் யூசுப், கிழக்கு மாகாணசபை முதலமைச்சரின் செயலாளர் உதுமாலெப்பை அப்துல் அஸீஸ் ஆகியோரே பங்குபற்றியுள்ளனர்.
இந்தப் பயிற்சி, கம்போடியாவிலுள்ள மோசென் பயிற்சி நிலையத்தில் திங்கட்கிழமை (18) ஆரம்பமாகியுள்ளதுடன், எதிர்வரும் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் நிலைத்து நிற்கும் அபிவிருத்தியை உறுதி செய்யும் நோக்கிலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்காகவும் உயிர்வாயு தொழில்நுட்பத்தை விரிவாக்குதல் என்ற திட்டத்துக்கு அமைய இந்த கள விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கம்போடியாவுக்குச் சென்றுள்ள இந்தக் குழுவினர் கம்போடியாவில் தங்கியிருந்து உயிர்வாயு தொழில்நுட்ப அமுலாக்கம் பற்றி அறிந்துகொள்ளவுள்ளனர்.
அந்நாட்டிலுள்ள தேசிய உயிர்வாயு செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வுகளை பெற்றுக்கொள்வதின் ஊடாக இலங்கை கிழக்கு மாகாணத்திலும் இயற்கைக்கு கேடு விளைவிக்காத இவ்வாறானதொரு செயற்றிட்டத்தை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு இந்த கள விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அலுவலர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
இயற்கை உயிர்வாயு தொழில்நுட்பத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம் சுவிட்ச் ஏசியா (Switch Asia) நிறுவனத்தின் அனுசரணையுடன் நிதியுதவி வழங்குகின்றது. இலங்கையில் இத்திட்டத்தை ஜனதாக்ஸன் நிறுவனமும் பீப்பிள் இன் நீட் (People in Need) செக் குடியரசு நிறுவனமும் இணைந்து அமுல்படுத்துகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
6 hours ago