Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 மே 20 , மு.ப. 07:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏறாவூர் காரியாலயத்துக்கு அருகில் பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்கும் ஆபாத்தான மின்மாற்றி காணப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இந்த மின்மாற்றி மிகவும் ஆபத்தான நிலைமையிலேயே காணப்படுவதாகவும் அதிகமான பொதுமக்கள் முதலமைச்சரின் காரியாலயத்துக்கு வருவதைக் குறிப்பிட்டு, பிரதேச இலங்கை மின்சார சபையின் காரியாலயத்துக்கு தெரிவித்தும் கூட இவ்விடயம் தொடர்பில் எந்த நடவடிக்கைகளையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
6 அடி உயர்த்தில் இருக்கும் இந்த மின்மாற்றிக்கு பக்கத்தில் பிரதான வீதியிலிருந்து உள்வீதிக்கு செல்லும் பாதை ஒன்றும் அமையப்பெற்றுள்ளது.
இந்த வீதியினால் பாடசாலை மாணவர்கள் அதிகம் சென்று வருவதனால், தற்போது அச்சம் கொண்டு மற்று வீதியால் சென்று வருவதாகனால் பெற்றோர்கள் கவலையடைந்துள்ளனர்.
இலங்கை மின்சார சபையின் ஏறாவூர் காரியாலயம் இதனை உடனடியாக கவனத்திற்கொண்டு இந்த மின்மாற்றிப் பெட்டியினால் ஆபத்து நிகழும் முன் மாற்றியமைக்க முன்வரவேண்டும் எனக் கேரப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago