Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 மே 20 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த பொலிஸ் நடமாடும் சேவை, ஆலையடிவேம்பு கண்ணகிபுரம் பிரதேசத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (23) நடைபெறவுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
இந்த நடமாடும் சேவை, அக்கரைப்பற்று உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த தலைமையில் காலை 8.00 மணி முதல் பி.ப. 2.00 மணி வரை ஆலையவேம்பு கண்ணகிபுரம் வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், அக்கரைப்பற்று பொலிஸ் மற்றும் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உள்ளிட்ட அரச அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இதில் கலந்துகொண்டு மக்களுக்கு சேவையாற்றவுள்ளனர்.
பொலிஸ் முறைப்பாடு, பொலிஸ் முறைப்பாட்டுப் பிரதியைப் பெறல், அடையாள அட்டை விண்ணப்பித்தல், காணி தொடர்பான பிரச்சினை மற்றும் சுகாதார சேவைகள் ஆகிய சேவைகளை மக்கள் இந்த நடமாடும் சேவையில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெறமுடியும் எனவும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .