2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

விழிப்புணர்வு கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 மே 20 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

போதைப்பொருள் குறித்து மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு, அக்கரைப்பற்று முனவ்வறா கனிஷ்ட கல்லூரியில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஏ.ஜே.அன்வர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவரும் கிழக்கிலங்கை அரபுக்கல்லூரி அதிபருமான அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. லத்தீப் பிரதம அதிதியாக கலந்துகொண்டு 'போதைப்பொருளும் இன்றைய மாணவர்களும்' எனும் தொனிப்பொருளில் உரையாற்றினார்.

மௌலவி எம்.ஐ.எம். பைஷால், உலமா சபையின் ஆலோசகர் ஏ.எல்.எம். அஸ்ரப் மௌலவி மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஏ.ஆர். மனாப் உட்பட ஆசிரியர்களும் மானவர்களும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X