2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

அம்பாறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

Gavitha   / 2015 மே 21 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

2015ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் அம்பாறை மாவட்டத்திலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மாதிரி படிவம் ஞாயிற்றுக்கிழமை (17) முதல் கிராம உத்தியோகத்தர்களின் ஊடாக சகல வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட்டு வருவதாக மாவட்ட தேர்தல்கள் உதவி அத்தாட்சி அதிகாரி தெரிவித்தார்.

குறித்த படிவத்தில் 18 வயதுக்கு குறையாத அதாவது 1997.05.31ஆம் திகதி அல்லது அதற்கு முன்பிறந்த அனைவரும் தமது தகவல்களை வழங்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான கணிப்பீட்டுக்கான அதிகாரிகளுக்கு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பெயர் பட்டியல் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தமது பெயர்களை உள்ளடக்காத சகல பிரஜைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்கவோ, ஆட்சேபனைகளை தெரிவிக்கவோ அவகாசம் வழங்கப்படவுள்ளது எனவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் ஓகஸ்ட் மாத இறுதி பகுதியில் இவ்வருடத்துக்கான உத்தேச வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .